மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் நோயாளர்கள் அனுப்பி வைப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில், நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும், அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, தரைவழியாக கொண்டு சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்