மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரையும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்க நிலத்தைப் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று பேர் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க