Sri Lanka Tamil News Site

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் படுகாயம்

- Advertisement -

உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் ஒருவர், பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் நுவரெலியா-இராகலையில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

குறித்த தாய் உணவகத்தின் மூன்றாவது மாடியில் தொழில் ஆரம்பித்த சில மணி நேரத்தில் ஜன்னல் வழியாக பாய்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் ஒரு பிள்ளையின் தாயான இராகலை – ஹல்கரனோயா தோட்டத்தைச் சேர்ந்த பி.நித்தியபிரபா (வயது 35) என்ற இளம் தாயே மாடியிலிருந்து குதித்து, பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!