மூதூர் – மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட சிறப்பு பூஜை

-மூதூர் நிருபர்-

மூதூர் – மல்லிகைத்தீவு திரு மங்களேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை சித்திரைப் புத்தாண்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது அதிகளவான சைவ மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பூசை வழிபாடுகளுக்கு ஆலயத்துக்கு வருகை தந்தோர் தங்களுக்குள்  புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க