மூதூரில் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்!
-மூதூர் நிருபர்-
பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர்,சம்பூர்,மல்லிகைத்தீவு,பள்ளிக்குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
மேலும் மூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்தை மேவி சுமார் 3 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.இதனால் இப்பாலத்தை கடந்து பயணிப்போர் மிகுந்த அசௌகரிங்களுக்கு மத்தியில் பயணிப்பதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.