
-மூதூர் நிருபர்-
தைப்பொங்கலுக்கு மறுதினம் கொண்டாடப்படும் பட்டிப்பொங்கலை மூதூர் பகுதியிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடை பட்டிகளில் பொங்கல் பொங்கி இன்று புதன் கிழமை கொண்டாடினர்.
இதன்போது பட்டிகளிலுள்ள மாடுகளுக்கு திருநீறு சாத்தி, கழுத்துகளில் பூமாலை இட்டு வழிபாடு செய்ததையும் காணமுடிந்தது.
மேலும் பட்டிகளில் பொங்கல் பொங்கி குடும்பத்தோடு பட்டிப் பொங்கலை மூதூர் கால்நடை வளர்ப்பாளர்கள் கொண்டாடியதையும் காணமுடிந்தது.