மூதூரில் தமிழர் பாரம்பரியத்துடன் இடம் பெற்ற பொங்கல் விழா!

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச இந்த குருமார் சங்கம் அறநெறி பாடசாலை ஆசிரியைகள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை   மூதூர் -சஹாயபுரத்தில் இடம்பெற்றது.

இதன்போது பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை மாணவர்கள் நிகழ்த்தி அதிதிகளை வீதியில் பேரணியாக அழைத்து வந்தனர்.

மேலும் அறநெறிப் பாடசாலை ஆசிரியைகள் நந்திக் கொடியை ஏந்தியவாறு பேரணியாக வீதிகளில் வலம் வந்தனர்.

மூதூர் பிரதேச இந்த குருமார் சங்க தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கல் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தினர் ,அறநெறி பாடசாலைகளின் ஆசிரியைகள், பிரமுகர்கள் , ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை  குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM