முள்ளந்தண்டு வடம் பாதித்த ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். கிளையினரால் முள்ளந்தண்டு வடம் பாதித்த ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.
இயற்கை உபாதைக்கு உட்பட்டு முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட கல்வியங்காடு பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையினரால் சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.