முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது

முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது தொடர்பில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1,706 பட்டதாரிகளுக்கும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்

பிள்ளைகளின் கல்வியில் சகலரும் கவனம் செலுத்துமாறும் நாசகார செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான அரவிந்த குமார், விஜித பேருகொட, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உட்பட கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்