முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிக்கிரியை
காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிக்கிரியை இன்று இடம்பெறவுள்ளது.
அவரது இறுதிக்கிரியை புதுடெல்லியில் உள்ள நிகம்போத் காட் பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்