முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன காலமானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன இன்று புதன்கிழமை காலமானார்.
அவர் தனது 71ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.