முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குத் தேவையான நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, பலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்