முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது !
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.