முன்னாள் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

‘கஜ முத்து’ விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்தது.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க