முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும் கையளிப்பு!
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.