Sri Lanka Tamil News Site

முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஷெல் சூரிச் ஏரியில் கண்டுபிடிப்பு

- Advertisement -

சுவிஸ் இராணுவத்தின் ஆயுத மற்றும் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் சூரிச் நகர பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சூரிச் ஏரியிலிருந்து மோட்டார் ஷெல் ஒன்றை மீட்டுள்ளனர்.

- Advertisement -

சூரிச் ஃபிஷர்ஸ்டூப் உணவகத்திற்கு அருகாமையில் உள்ள ஏரியில் கடந்த செவ்வாய்க்கிழமை சுழியோடி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மோட்டார் குண்டு தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்ற நிலையில் சுமார் 5 மீற்றர் ஆழத்தில் புதையுண்டிருந்த இந்த குண்டை மீண்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டு 1914 மற்றும் 1918 க்கு இடையில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட முதலாம் உலகப் போரின் பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஷெல் என்று வெடிபொருள் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!