முட்டை விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த நாட்களில் 35-38 ரூபாவாகக் குறைக்கப்பட்ட முட்டை தற்போது 40-45 ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30 மற்றும் 31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில வியாபாரிகள் முட்டை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.