முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் காயம்
-பதுளை நிருபர்-
கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 47 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண்ணின் மகளை உயர்தரப் பரீட்சைக்குக்கு பரீட்சை நிலையத்திற்கு கொண்டு சென்று வீட்டு விட்டு வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த பெண்ணை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று காயமடைந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் குறித்த பெண்னை ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றியதாகவும், அவரது நிலைமை மோசமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹப்புத்தளை பங்கெட்டிய பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்