மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.