மீன்பிடிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

தந்தையும் மகனும் நேற்றைய தினம் புதன் கிழமை யான் ஓயா ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது தந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை புடவைக்கட்டு சாகரபுர எனும் இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை 1 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த செய்லாப்தீன் முபாறக் ( வயது – 56 ) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பிலான விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.