மீனவர் பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும் – அண்ணாமலை

மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும் என்றே இந்திய அரசு, இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், மீனவ பிரச்சினை தொடர்பாக தாம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை எழுதியதாகவும், குறித்த கடிதத்திற்குப் பதிலளித்த அவர் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் எனக் குறிப்பிட்டதாகவும் ,பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க