
மீண்டும் மூடப்படும் கண்டி-மஹியங்கனை வீதி
கண்டி – மஹியங்கனை வீதி இன்று மாலை 6 மணிமுதல் மீண்டும் மூடப்படவுள்ளது.
இதேவேளை நாளை காலை 6 மணிவரையில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
குறித்த வீதியின் உடுதும்பர – கஹடகொல்ல பகுதியில் சரிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கற்பாறைகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்