மிருகக்காட்சிசாலைக்கு 70 விலங்குகளை பரிசளித்த ஜனாதிபதி!

வடகொரியாவில் உள்ள பிரதான மிருகக்காட்சிசாலைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சிங்கம் ஒன்று உட்பட 70 விலங்குகளைப் பரிசளித்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து விமானம் ஊடாக குறித்த விலங்குகள் வடகொரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வடகொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

யுக்ரைனில் ரஷ்யாவுடன் இணைந்து போரிடுவதற்காக வடகொரியா ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியுள்ளமையை அமெரிக்காவும் தென்கொரியாவும் உறுதிப்படுத்தி சில வாரங்களுக்குப் பின்னர் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரஷ்ய சுற்றுச்சூழல் அமைச்சரும் வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.