மியன்மாரில் மீண்டும் நில அதிர்வு

மியன்மாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.54 மணியளவில் 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நிலத்திலிருந்து 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நில அதிர்வால் சொத்துக்களுக்கோ உயிருக்கோ சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க