மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு

மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நுவரெலியா பிரதேசத்தில் ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மின்சார சபை ஊழியரொருவரே உயிரிழந்துள்ளார்.

மின்சார சபைக்குச் சொந்தமான லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற மின் கம்பம் ஒன்றை லொறியிலிருந்து இறக்க முயன்ற போது மின் கம்பமானது மின்சார சபை ஊழியரின் மீது தவறி வீழ்ந்துள்ளது.

இதனையடுத்துஇ காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹங்குரன்கெத்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்