மின்பிறப்பாக்கி பழுது : இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை

-யாழ் நிருபர்-

மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையால் வைத்தியசாலை முழுவதும் நேற்று இருளில் மூழ்கியது .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இவ்வாறான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயங்க மறுத்ததன் காரணமாக தொலைபேசி வெளிச்சத்தின் மூலம் சேவைகள் இடம்பெற்றதாக அறியக் கிடைத்துள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இவ்வாறு வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி உரிய முறையில் பராமரிக்கப்படாததன் விளைவே இவ்வாறான தடங்கல்கள் ஏற்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Minnal24 வானொலி