Sri Lanka Tamil News Site

மின்துண்டிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

- Advertisement -

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இடம்பெறவுள்ளதால், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் 29ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்துண்டிப்பு இடம்பெறாது

- Advertisement -

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் குறித்த இரண்டு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.30க்கு பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது.

குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறாத வேளையில் மதியம் 12 மணி முதல் மாலை 6.30 வரையிலான காலப்பகுதிக்குள் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த ஏனைய அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கைத்தொழில் வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும், எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -