மின்சார வேலியில் சிக்கிய இளைஞனின் கதி

-பதுளை நிருபர்-

ஹாலிஎல ரொக்கத்தன்ன பகுதியில் காட்டுக்குள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்று கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

ரொக்கத்தன்ன நடுப்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்த நபர் நேற்றிரவு தனது வீட்டுக்கு கீழ் பகுதியில் உள்ள காட்டு பிரதேசத்தில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக மின்சார வேலியை அமைப்பதற்காக சென்ற வேளையில் மிக நீண்ட நேரமாக வீடு திரும்பாதமையினால் குறித்த காட்டுப் பகுதியில் தேடுதலை மேற்கொண்ட உறவினர்கள் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இன்று காலை காணப்பட்டதை அவதானித்துள்ளனர். உடன் ஹாலிஎல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.