மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

மஹியங்கனை, புஜநகர பிரதேசத்தில் நபர் ஒருவரால் இழுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கிய யானை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

தனி நபரின் காணியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அற்ற மின் வேலியில் மோதி குறித்த யானை உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

இதனடிப்படையில் மஹியங்கனை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்,  மின்சார கம்பியை இழுத்ததாக கூறப்படும் நபரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்