Sri Lanka Tamil News Site

மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பு

- Advertisement -

மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் சாதாரண அளவில் என்றாலும் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனைகள் மின்சக்தி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- Advertisement -

தற்போது 277 பில்லியன் ரூபா வருவாய் கிடைக்கிறது, எனினும் மின்னுற்பத்திக்கான செலவு 755 பில்லியன் ரூபாவாக உள்ளது.

இதனை ஈடு செய்வதானால் மின் கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

எனினும் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை.

கட்டணம் அதிகரிக்கப்படாமையால் இலங்கை மின்சார சபையின் பணியாளர்களுக்கு கடந்த மாதம் வேதனத்தை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, சாதாரண அளவில் மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட வேண்டும், என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!