மின்கம்பத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை

-பதுளை நிருபர்-

பசறை எல்டப் கிக்கிரிவத்தை 18 ஆவது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மின்கம்பம் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள இரண்டு மின்கம்பங்களை மாற்றி தருமாறு கூறி கடந்த பல மாதங்களுக்கு முன் பசறை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் இருப்பினும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மின்கம்பங்கள் முறிந்து லயன் குடியிருப்பின் மீது விழுமேயானால் பாரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் 20 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைய கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி குறித்த மின்கம்பங்கள் இரண்டையும் மாற்றி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின்கம்பத்தை மாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை