மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும்

எதிர்வரும் 18ஆம் திகதி அமுலாகும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை – தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு அமுலாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனை இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, பூஜ்யத்தில் இருந்து 29 வரையான மின் அலகுக்கான கட்டணம் 2 ரூபாவாலும், 30 முதல் 60 வரையான மின் அலகுக்கான கட்டணம் 11 ரூபாவாலும், 61 முதல் 90 வரையான மின் அலகுக்கான கட்டணம் 12 ரூபாவாலும் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 91 முதல் 120 வரையான மின் அலகுக்கான கட்டணத்தை 20 ரூபாவால் குறைக்க இலங்கை மின்சார சபையினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்