மிக பிரம்மாண்டமான மாவிலை : ஆச்சரியமாக பார்வையிடும் மக்கள்

-யாழ் நிருபர்-

மா மரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறாக 60 சென்ரிமீற்றர் நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற அதிசயம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நிகழ்ந்துள்ளது.

சாதாரணமாக ஒரு மாவிலையானது 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே இருக்கின்ற பொழுதும், இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும், 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.

சாவகச்சேரி டச் வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்