
மாளிகைக்காடு அல்- ஹுசைனின் புதிய அதிபராக ஏ.சி.எம்.நளீம் பொறுப்பேற்றார்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் புதிய அதிபராக அப்பாடசாலையின் பிரதியதிபராக கடமையாற்றிவந்த இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டை சேர்ந்த ஏ.சி.எம்.நளீம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
அப்பாடசாலையின் ஸ்தாபக ஆசிரியராக, அதிபராக கடந்த 30 வருடங்கள் கடமையாற்றி வந்த ஏ.எல்.எம்.ஏ. நளீர் கடந்த வாரம் ஓய்வுபெற்று சென்றமையை அடுத்து புதிய அதிபராக அப்பாடசாலையின் பிரதியதிபராக கடமையாற்றிவந்த இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டை சேர்ந்த ஏ.சி.எம்.நளீம் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
அதிபராக கடமையாற்றிய நளீர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பாடசாலையை பிரதியதிபராக கடமையாற்றிய நளீம் சிறந்த முறையில் வழிநடத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் முன்னிலையில் புதிய அதிபராக ஏ.சி.எம். நளீம் தமது கடமைகளை பொறுப்பேற்றார். கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட், கல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், பாடசாலை PSI இணைப்பாளர் எம்.எம்.எம். றபீக், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், ஆசிரியர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.