மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டி கொலை

இந்தியாவில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நடராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவரை வழிமறித்து அரிவாளால் தலை மற்றும் உடல் பகுதிகளில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்