
மாற்றத்தை ஆரம்பித்த மட்டக்களப்பு இந்து கல்லூரி
கிளீன் ஸ்ரீ லங்கா செயற்றிட்டத்தின் ஒரு பகுதியான நிலைபேறான சுற்றுச்சூழலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சுத்தமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஒரு படி ( Pure BHC) செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக பாடசாலை வளாகம், பாடசாலையை அண்டியுள்ள பிரதேசங்கள் என்பன கல்லூரியின் சுகாதாரக் கழகம் (Hindu Health Care Club), சுற்றாடல் படையணி, சாரணர் படையணி, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் ஆகியோரினால் சுத்தம் செய்யப்பட்டன.
மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பொறுப்புணர்வை வளர்க்கும் வழியில், ஒரு புதிய சுத்தமான மற்றும் நிலைத்த சுற்றுச்சூழலை உருவாக்கலும் கல்லூரியில் கற்கும் 1200 மாணவர்களினூடாக 1200 குடும்பங்களுக்கும், அக் குடும்பங்களினூடாக அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் நிலைபேறான ஆரோக்கியமான சுகாதாரமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதுமே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்