Sri Lanka Tamil News Site

மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் போதைப்பொருள் வியாபாரி கைது

- Advertisement -

-அம்பாறை நிருபர்-

கேரளாகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக முறையில் விற்பனை செய்துவந்த கல்முனைக்குடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதான நபரை அம்பாறை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து , விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று குறித்த போதை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபரை கல்முனை அம்மன் கோவில் வீதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வியாபாரி என விசாரணையின் போது தெரியவந்துள்ளதுடன் , சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 4.42 மில்லி கிராம் உட்பட கேரளா கஞ்சா 765 கிராமும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -