மாம்பழங்களும் அதன் நகரங்களும்

மாம்பழங்களும் அதன் நகரங்களும்

🥭மலிஹாபாத்
இந்தியாவில் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களால் அதிகம் விரும்பப்படும் தாசெஹ்ரி மாம்பழங்களின் விளைச்சலுக்கு பெயர் பெற்ற நகரம் மலிஹாபாத். உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் தாசெஹ்ரி வகை மாம்பழங்கள் அதிகம் விளைகின்றன.

இம் மாம்பழம் இனிப்பு சுவை மிக்கது. இதன் அடர்தியான சதை மற்றும் நறுமணம் இதன் மதிப்பை உயர்த்துகிறது.

🥭பங்கனப்பள்ளி
ஆந்திரா பிரதேசத்தில் உள்ள பங்கனப்பள்ளி நகரம் மாம்பழத்தின் அடையாளத்தை கொண்டது. இதன் பெயரிலேயே அழைக்கப்படும் பங்கனப்பள்ளி மாம்பழம் பிரபல்யமானது.
மற்ற மாம்பழங்களை விட நார்ச்சத்து அதிகம் இல்லாதது. தித்திப்பான சுவை கொண்டது. தென்னிந்தியா முழுவதும் விரும்பி ருசிக்கப்படும் மாம்பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

🥭வாரணாசி
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி மாம்பழங்களும் புகழ் பெற்றது. மாம்பழ பிரியர்களின் விருப்பமான இடமாகவும் வாரணாசி விளங்குகிறது. இங்கு விளையக்கூடிய லாங்க்ரா மாம்பழங்கள் பெயர் பெற்றது. இந்தப்பழம் ருசியானது சுவையில் இனிமையானது.

🥭ஹர்டோய்
சவுசா மாம்பழங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹர்டோய் நகரிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் பரவலாக வளர்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கிடைக்கும்.

🥭பெங்களுர்
இந்தியாவின் சிலிக்கான்பள்ளத்தாக்கு எனப்படும் கர்நாடகாவில் பெங்களுர் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் தோதாபுரி அல்லது பெங்களுர் என்று அழைக்கப்படும் மாம்பழங்கள் விளைகின்றன.இவற்றின் இனிப்பும், சுவையும் தனித்துவமானது.

 விரம்பி ருசிப்பதற்கு ஏற்றசதைப்பற்று கொண்டது. இந்தியாவில் மட’டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த வகை மாம்பழங்கள் விரும்பி உண்ணப்படுகின்றன.

🥭மால்டா
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் மால்டா இன் நகரம் மாம்பழ விளைச்சலுக்கு பெயர் பெற்றது.இந்த மாம்பழம் பஸ்லி என்றும் அழைக்கப்படுகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இந்த மாம்பழங்களை சுவைக்கலாம். இந்த மாம்பழங்கள் அளவில் பெரியது ஒவ்வொன்றும் 700முதல் 1500 கிராம் வரை எடை கொண்டிருக்கும்.

🥭ஜூனாகத்
குஜராத்தில் உள்ள ஜூனாகத் நகரம் கேசர் மாம்பழங்களுக்கு பிரபலமானது.மாம்பழங்களின் ராணி என்றும் இம் மாம்பழங்களை அழைப்பர். குங்குமப்பூ நிறதோற்றம் கொண்ட இந்த மாம்பழங்களின் சுவை அபாரமாக இருக்கும்.

🥭முர்ஷிதாபாத்
மேற்கு வங்காளத்திலுள்ள முர்ஷிதாபாத் நகரம்,வட இந்தியா முழுவதும் அதிகம் விரும்பப்படும் ஹிம்சாகர் மற்றம் கிஷன்போக் மாம்பழங்களின் விளைச்சலுக்கு பிரபலமானது. இந்த மாம்பழங்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

🥭ரத்னகிரி
பழங்களின் ராஜா என்றால் அது அல்போன்சா வகை மாம்பழங்கள் தான். இதனை ஹாபஸ் என்றும் அழைக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாம்பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

அல்போன்சா மாம்பழங்களையே பிரத்தியேகமாக விளைவிப்பதால் இந்தியாவை கடந்து உலக அளவில் ரத்னகிரி பிரபலம் அடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்