மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்: மருமகன் தலைமறைவு
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை சென்ற அவரது மருமகன் நாட்டுத்துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைசேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்