மாமனாரைத் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

களுத்துறை மாவட்டத்தில் மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பில் உள்ள பிரதான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கலும் டி சில்வா தலைமையில் குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்