
மாநகர சபை ஊழியர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி
-பதுளை நிருபர்-
பதுளை பண்டாரவளை வீதியில் பண்டாரவளை டம்ரோ காட்சியறை அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பண்டாரவளை மாநகர சபை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
அம்பட்டிகொட கஹகொல்ல பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் இதன்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை மாநகர சபையில் பணிபுரியும் தொழிலாளி குப்பைகளை சேகரித்து கொண்டிருந்த நிலையில் பண்டாரவளை நகரை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பலத்த காயமடைந்த நிலையில் அவர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரும் பலத்த காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்