மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையின் கட்டிடத்தின் மீது நேற்று புதன்கிழமை இரவு மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 34 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

12 கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 12 கைதிகள் மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறைக்கைதி மிதிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.