மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் கைது!
சில காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி, அவர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணொளி அழைப்பு ஊடாக கருத்துக்களை பரிமாறியுள்ளார்.
இதன்போது, பதிவு செய்யப்பட்ட காணொளிகளை அடிப்படையாக கொண்டு இந்த அச்சுறுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos