
மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் கொழும்பில் அமைதி போராட்டம்
மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு செல்ல உள்ளார்கள். அங்கு மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்