மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-நிந்தவூர் நிருபர் யுசைல்-

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இமாம் ரூமி இளைஞர் கழகத்தினால் பாடசாலைக்கு புதிதாக இணைந்த 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன் போது பிரதம அதிதியாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக்,  நிந்தவூர் பிராந்தியத்திற்கு பொறுப்பான இளைஞர் சேவை உத்தியோகத்தர் பரீட்   மற்றும் பர்ஹான் சனசமூக நிலையத்தின் தலைவர் நௌபல் ,  பாடசாலை அதிபர் மற்றும் இமாம் ரூமி இளைஞர் கழகத்தின் தலைவர் MJM. ஜுஸைல்  இமாம் ரூமி இளைஞர் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.