மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்-

அறக்கொடைச் செம்மல், திருப்பணி அரசு  திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அவர் தான் கல்வி கற்ற பாடசாலைகளான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை ஆகியவற்றிற்கு விஜயம் செய்து 490 மாணவச்செல்வங்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார்.

கடந்த காலங்களில இப்பாடசாலைகளுக்காக பலமில்லியன் ரூபாக்களில் திரு.நாதன்  பல அபிவிருத்திகளை செய்து கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.