
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்குள் நுழைந்த இத்தாலி வீரர்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, கனடா வீரர் கேப்ரியல் டியல்லோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.