
மஹா சிவராத்திரி – 2025
மஹா சிவராத்திரி – 2025
சிவபெருமானின் அருள் பெற்ற இரவு மற்றும் மிகவும் புனிதமான திருவிழாவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இரவு என்றும், புனிதமான நாளாகவும் விளங்குகிறது. மஹா சிவராத்திரியை உலகமெங்கும் சிவபக்தர்கள் பெரும் ஆராதனையுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் 2025 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி பெப்ரவரி 26 அன்று இடம்பெற இருக்கின்றது.
⭐மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம்
மஹா சிவராத்திரி என்பது இரவில் நடைபெறும் புனிதமான தவம் மற்றும் வழிபாட்டு நாள் “சிவராத்திரி” என்றால் “சிவனின் இரவு” என பொருள். இந்த நாளின் முக்கிய நோக்கம், பக்தர்களின் ஆன்மிக முன்னேற்றம் மற்றும் இறைவனுடன் இணைந்திருக்கும் தன்மையை உணர்தலாகும் இந்த இரவில் பக்தர்கள் சிவபெருமானிற்கு ஆராதனை செய்து மனதை தூய்மையாக்கி தியானம் செய்வதன் மூலம் ஆன்மிக பரிணாமத்தை அடைய முடியும்.
⭐பூஜை மற்றும் வழிபாட்டு முறைகள்
மஹா சிவராத்திரியில் சிவபெருமானின் வழிபடுவது மிகவும் முக்கியமானது இந்த நாளில் சிவலிங்கத்தின் மீது புனிதமான பூக்கள், பன்னீர்கள், நெய் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களை வைத்து ஆராதனை செய்து நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நாளில் சைவ சமயத்தவர்கள் முழுநேரமும் தவம், தியானம் மற்றும் பக்தி செயல்களை மேற்கொண்டு “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை பல முறை உச்சரித்து மனதில் ஆழ்ந்த தியானம் செய்கின்றனர்.
⭐ஆன்மிக நோக்கம்
மஹா சிவராத்திரியில் நடைபெறும் வழிபாடு ஆன்மிக முன்னேற்றம் மற்றும் இறைவனுடன் நமக்குள்ள தொடர்பை பலப்படுத்துவது இந்த நாள் பக்தர்கள் தங்கள் மனதை கவர்ந்தெடுத்து யோகம் மற்றும் தியானத்தின் வழியாக இறைவனை உணர்ந்து சிவபெருமானின் அருளைப் பெறுவது மட்டுமல்லாது மனித வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.
⭐பொதுவான கடமைகள்
இந்நாளில் பக்தர்கள் எதுவும் சாப்பிடாமல் இருப்பது தவம் மற்றும் பக்தி வழிகளுக்கு மத்தியில் நேரத்தை செலவிடுவது என்பவை பொதுவான செயல்களாகும். உணவு உண்ணாமல் மிகுந்த பக்தி, தியானம் மற்றும் சிவ பூஜை செய்வது வழக்கம்.
சிவபக்தர்கள் இந்த நாளில், மனதையும் உடலையும் ஒரு பரிபூரண நிலைக்கு கொண்டு வந்து இறைவனின் அருள் பெறும் நோக்கில் வழிபாடு, தவம், தியானம் மற்றும் ஆன்மிக சாதனைகளை நடாத்தி ஆன்மிக உயர்வை அடைய முடியும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்