
மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்
-நுவரெலியா நிருபர்-
மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரணியாக வந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
எரிபொருள் விலை, கோதுமை மாவிலை உட்பட விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.