மழை நீரில் வழுக்கி லொறி விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை மீரிகமவிலிருந்து தலவாக்கலை அக்கரபத்தனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று வீதியில் மழை நீரில் வழுக்கி சுரங்கப் பாதையில் மோதியுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பெய்த மழையின்போது சென்று கொண்டிருந்த லொறி மழை நீரில் வழுக்கி சுரங்கப்பாதையில் மோதி நின்றதாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.